பாலதண்டாயுதபாணி கோவிலில் விசாக திருவிழா
குத்தாலம் பாலதண்டாயுதபாணி கோவிலில் விசாக திருவிழா
மயிலாடுதுறை
குத்தாலம்:
குத்தாலம் பஞ்சுக்கார செட்டி தெருவில் பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 59-வது ஆண்டு விசாக நட்சத்திர காவடி பால்குட திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் குத்தாலம் காவேரி தீர்த்த படித்துறையில் இருந்து அலகு காவடிகள், கூண்டு காவடிகள், பால்குடங்கள் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக மேள வாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் சந்தன காப்பு அலங்காரமும், சத்ரு சம்ஹார திரிசிதி அர்ச்சனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story