வைரலான காவலர் ஆடியோ - வருத்தப்பட்ட டிஜிபி எடுத்த அதிரடி நடவடிக்கை


x

காவல்துறையில் பணிபுரிந்து வரும் தனக்கு சொந்த மகள் நிச்சயதார்த்தத்தை கூட நடத்த முடியவில்லை என திருப்புவனம் காவல்நிலைய சிறப்பு ஆய்வாளர் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.

சென்னை,

காவல்துறையில் பணிபுரிந்து வரும் தனக்கு சொந்த மகள் நிச்சயதார்த்தத்தை கூட நடத்த முடியவில்லை என திருப்புவனம் காவல்நிலைய சிறப்பு ஆய்வாளர் சந்தானராஜ் வெளியிட்ட ஆடியோவை கேட்ட டிஜிபி, அவருக்கு விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

திருப்புவனம் காவல்நிலைய சிறப்பு ஆய்வாளர் சந்தானராஜ், ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இந்தநிலையில், இந்த ஆடியோவை கேட்ட டிஜிபி சைலேந்திரபாபு, திருப்புவனம் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தானராஜாவிடம் கடிதம் மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சந்தானராஜூக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தங்களது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைபட்டதை அறிந்து மன வருத்தம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் விடுப்பு வழங்க மறுக்கக்கூடாது என மேலதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வரும் நாட்களில் தங்களது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்த ஏதுவாக போதுமான விடுப்பு வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு தனது கடிதத்தில் கூறியுள்ளார்.


Next Story