விநாயகர் சதுர்த்தி: சென்னை- கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


விநாயகர் சதுர்த்தி: சென்னை- கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x

பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல் - கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் வரும் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியைமுன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல் - கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னை சென்டிரல் - கோவை சிறப்பு ரெயில் வண்டி எண் (06151) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு கோவை சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் கோவை - சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் வண்டி எண் (06152) வருகிற 8ம் தேதி கோவையில் இருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story