விநாயகர் சதுர்த்தி: மைசூரு-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்


விநாயகர் சதுர்த்தி: மைசூரு-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி மைசூரு-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழ்நாட்டின் தென்மாவட்டமான தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கர்நாடக மாநிலம் மைசூரு இடையே சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மைசூரு-செங்கோட்டை சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06241) வருகிற 4 மற்றும் 7-ந்தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக செங்கோட்டை-மைசூரு சிறப்பு ரெயில் (06242) வருகிற 5 மற்றும் 8-ந்தேதிகளில் செங்கோட்டையில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2.20 மணிக்கு மைசூரு சென்றடையும்.

இந்த ரெயில்கள் இரு மார்க்கமாகவும், மண்டியா, மத்தூர், ராமநகர், கெங்கேரி, கே.எஸ்.ஆர். பெங்களூரு, கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.


Next Story