விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்


விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

சிவகங்கை,

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூதவாகனம், கமல வாகனம், ரிஷிப வாகனம், மயில் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 8ஆம் திருநாளான நேற்று வெள்ளி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில், 9-ம் திருவிழாவான இன்று கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி தேரோட்ட விழா இசை வாத்தியங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பெரிய தேரில் கற்பக விநாயகர் எழுந்தருளியுள்ளார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இரவு 10மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்துள்ளனர்


Next Story