3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்
மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம் அடைந்து 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் கிராம மக்கள் தவித்தனர்.
தர்மபுரி
பாலக்கோடு:-
பாலக்கோடு ஒன்றியம் பேளாரஹள்ளி கிராமத்தில் புளிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் மின்கம்பம் ஒன்று சாய்ந்து விழுந்து சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆகியும் இதுவரை முறிந்து விழுந்த மின்கம்பமும் அகற்றப்படவில்லை. மின் இணைப்பு கொடுக்கப்பட்டு மின்சார வினியோகமும் நடைபெறவில்லை. இதனால் அந்த கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story