கிராம மக்கள் மறியல்


கிராம மக்கள் மறியல்
x

கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

வையம்பட்டி:

வையம்பட்டியை அடுத்த தண்டல்காரனூரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பயன்படுத்தும் பாதையை, அது தங்களின் பட்டா இடம், அதனால் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கூறி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இடத்தில் உள்ள குடிநீர் குழாயை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சரி செய்ய சென்றபோது 3 பெரும், கிராம மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீரின்றி வெயிலில் தவித்து வருகிறோம். சிலர் பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுப்பதை ஏற்க முடியாது என்று கூறி, கருங்குளம் பிரிவு சாலை அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வையம்பட்டி போலீசார் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் குணசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, 3 நாட்களில் உரிய தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்து ெபாதுமக்கள் மறியலை கைவிட்டனர்.


Next Story