செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு


செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்

திருவாரூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

செல்போன் கோபுரம்

திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சியில் 400-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் மத்திய பகுதியான மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதால் பொதுமக்கள் இடையூறு ஏற்படும் என்றும், செல்போன் கோபுரம் அமைய உள்ள இடத்தின் அருகில் பள்ளி கூடம் அமைந்துள்ளது என்றும் செல்போன் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என கிராம கோரிக்கை விடுத்தனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயற்சி

மேலும் கூடூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்திலும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் நலன் கருதி செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள், கிராம நல சங்கத்தினர் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரம் அமைக்கும் இடத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்று சட்டப்படி தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினர்.

செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story