கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கம் சார்பில் நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் வெற்றிசெல்வன் தலைமை தாங்கினார். ஊராட்சி களப்பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் அமுதா வரவேற்றார். தலைவர் செல்வி முன்னிலை வகித்தார். அரசு பணியாளர் சங்க மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மழைக்காலங்களில் பணியாற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மழைகோட் மற்றும் கையுறை வழங்க வேண்டும் என்பக உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர்கள் மகேந்திரன், அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story