ஊராட்சிகளில் உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டம்
ஊராட்சிகளில் உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டம் நடந்தது.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் பந்தநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் நளினி சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அரசு கொறடா கோவி. செழியன், ஒன்றியக்குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணைத் தலைவர் கோ.க.அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் மிசாமனோகரன், ரவிஉதயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, பந்தநல்லூர் ஊராட்சிக்கு விரைவில் சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோல் குறிச்சி, கோவில்ராமபும், அணைக்கரை ஊராட்சியில் பல்வேறு திட்ட பணிகள் குறித்து குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் குணசேகரன், மகேஸ்வரி அருள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாலகுரு, ஒன்றிய அலுவலர் கண்ணகி, ஊராட்சி செயலாளர் பூமிநாதன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.