கிராம சபை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.
மே தினம்
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள வானரமுட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கல்லூரணி கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் இசக்கியம்மாள் தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து அலுவலர் விஜி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் சங்கரநாராயணன், வானரமுட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாரியப்பன், நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமை அதிகாரி சுபாஷ் முத்துராமலிங்கம், சமூகவியலர் பாலமுருகன், வேளாண்மை அலுவலர் முத்துசெல்வி ஆகியோர் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சுகாதார ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், கார்த்திக் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வில்லிசேரி
வில்லிசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கிராம சபை கூட்டம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் வேலன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் காசிராஜன் வரவேற்று பேசினார். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் சிறப்புரையாற்றினார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் குமார், கால்நடை ஆய்வாளர் உமா மகேஸ்வரி, வேளாண்மை துறை அலுவலர் பாலமுருகன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ரேணுகாதேவி, 14-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் கிருபாகரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வசந்தா, கொம்பையா, சரோஜா மற்றும் அங்கன்வாடி பணியாளர் தனலட்சுமி, பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இனாம் மணியாச்சி
இனாம் மணியாச்சி பஞ்சாயத்து கிராம சபை கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கச்சாமி, பஞ்சாயத்து துணை தலைவர் ரேவதி, செயலாளர் சந்திரன், முன்னாள் ராணுவ வீரர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்வராஜ் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், இனாம் மணியாச்சி பஞ்சாயத்தை பேரூராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நட்டாத்தி
நட்டாத்தி ஊராட்சியின் மே தின கிராமசபை கூட்டம் கொம்புக்காரன் பொட்டல் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் முன்னிலை வகித்தார். பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப், வார்டு உறுப்பினர்கள் ஜான்சிராணி, சரோஜா, பண்டாரம், மணிமந்திரம். அங்கன்வாடி பணியாளர்கள் ஜோதிகனி, உச்சிமாகாளி, தேவிகலா, டி.வி.எஸ். தொண்டு நிறுவனம் சார்பாக செல்வி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளச்சாமி பணித்தள பொறுப்பாளர்கள் எஸ்தர், மருதவள்ளி, மேரிஆனந்தி மற்றும் ஊராட்சி பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் தூய்மை கிராம உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முத்துராஜ் செய்திருந்தார்.
செட்டியாபத்து
இதேபோல் செட்டியாபத்து ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஊராட்சி செயலர் கணேசன் நன்றி கூறினார்.
பரமன்குறிச்சி ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் இலங்காபதி தலைமையில், துணை தலைவர் முத்து லிங்கம் முன்னிலையில் நடந்தது. ஊராட்சி செயலர் சுந்தர் நன்றி கூறினார். வெங்கடராமானுஜபுரம் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் பாலசரஸ்வதி தலைமையில், துணைத் தலைவர் ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. வெள்ளாளன்விளை ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் ராஜரத்தினம் தலைமையில் நடந்தது. முடிவில், ஊராட்சி செயலர் ராஜலிங்கம் நன்றி கூறினார்.