கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்
கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர்
அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோட்டாட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டமைப்பு சார்பில் விடுப்பு எடுத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பணியமைப்பு விதிக்கு முரண்பாடாக வழங்கப்பட்ட 4 கிராம நிர்வாக அலுவலர்களின் பணி மாறுதல் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி கோரிக்கைகள் வழங்கி இருந்த நிலையில் கோரிக்கையை நிறைவேற்றாத, நிர்வாகிகளை அழைத்து பேசாத கோட்டாட்சியரை கண்டிக்கிறோம் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதன் பிறகும் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் வருகிற 3-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 173 கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story