சந்தனப் பேழையில் வைத்து விஜயகாந்த் உடல் நல்லடக்கம்
தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
கடும் நெரிசல் ஏற்பட்டதையடுத்து விஜயகாந்தின் உடல் இன்று காலை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தீவுத்திடலில் மதியம் வரை விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் விஜயகாந்த் உடல், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
Live Updates
- 29 Dec 2023 4:41 PM IST
விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்
வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கண்ணீருடன் இறுதி அஞ்சலி
- 29 Dec 2023 4:06 PM IST
கேப்டன் விஜயகாந்தின் இறுதி சடங்கை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால், கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாயிலில் பெரிய எல்.இ.டி திரை அமைக்கப்பட்டுள்ளது.
- 29 Dec 2023 3:51 PM IST
ஈ.வி.ஆர் சாலையை தவிர்க்க அறிவுறுத்தல்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் இறுதி ஊர்வலம்; ஈ.வி.ஆர் சாலையை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தல்
- 29 Dec 2023 3:47 PM IST
இறுதி ஊர்வல பாதையில் அணிவகுத்து செல்லும் தொண்டர்கள், ‘வீரவணக்கம், வீரவணக்கம்.. கேப்டனுக்கு வீரவணக்கம்’ என்று முழக்கமிட்டபடி சென்றனர்.
- 29 Dec 2023 3:36 PM IST
இறுதி ஊர்வல பாதை மாற்றம்
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வல பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் திரண்டு வருவதால் சிவசாமி சாலை வழியாக திருப்பி விடப்பட்டது
- 29 Dec 2023 3:29 PM IST
சந்தனப்பேழையில் இடம்பெற்றுள்ள வாசகம்
விஜயகாந்த் அடக்கம் செய்யப்படும் 'சந்தனப்பேழையில் புரட்சிக்கலைஞர் கேப்டன்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
- 29 Dec 2023 2:53 PM IST
சென்னை தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. வழிநெடுக மக்கள் பாச தலைவருக்கு கண்ணீர் அஞசலி செலுத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர். கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் விஜய பிரபாகரன் கதறி அழுதார்.
- 29 Dec 2023 2:36 PM IST
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இறுதி அஞ்சலி செலுத்தினார்.