அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்..? ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு


அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்..? ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு
x
தினத்தந்தி 25 Jan 2024 1:11 PM IST (Updated: 25 Jan 2024 1:22 PM IST)
t-max-icont-min-icon

விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.

இதற்கிடையே சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் கட்சியை பதிவு செய்துவிட்டு அதன்பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது மற்ற கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பதை முடிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், 'எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். மக்கள் பணிகளை மேற்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். பணிகளை செய்யும்போது தடை ஏற்பட்டால் உடனடியாக தலைமைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story