தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு


தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 26 Aug 2023 3:15 AM IST (Updated: 26 Aug 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் மாடுகளுக்கு அம்மை நோய் பரவல் உள்ளதால், தமிழக எல்லையில் உள்ள கிராமங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கேரளாவில் மாடுகளுக்கு அம்மை நோய் பரவல் உள்ளதால், தமிழக எல்லையில் உள்ள கிராமங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

மாடுகளுக்கு தடுப்பூசி

கேரளாவில் மாடுகளுக்கு வாய் சப்பை, அம்மை நோய் பரவல் உள்ளது. இதனால் தமிழக எல்லைகளில் உள்ள கிராமங்களில் கால்நடை டாக்டர்கள் கொண்ட குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிராமங்களில் முகாம் நடத்தி மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களிலும் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது:-

கேரளாவில் உள்ள 4 மாவட்டங்களில் மாடுகளுக்கு வாய் சப்பை, அம்மை நோய் தாக்குல் உள்ளது. இந்த நோய் பரவல் தமிழகத்தில் இலலை. இருப்பினும், கேரளாவில் இருந்து மாடுகளுக்கு பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி கோட்டத்தில் சுமார் 40 ஆயிரம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த பணி 90 சதவீதம் நிறைவு பெற்று உள்ளது.

கேரளாவில் வாங்கக்கூடாது

இதற்கிடையில் அதிகமாக மாடுகள் வைத்திருந்தால் அவர்களால் மாடுகளை மருந்தகங்களுக்கு கொண்டு வருவதில் சிரமம் உள்ளது. இதனால் கால்நடை டாக்டர்கள் நேரடியாக தோட்டங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மேலும் முகாம்கள் நடத்தியும் தடுப்பூசி போடப்படுகிறது.

கேரளாவில் நோய் பரவல் உள்ளதால் அங்கிருந்து வியாபாரிகள் மாடுகளை வாங்கி வருவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள், விவசாயிகள் மாடுகளுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை டாக்டர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story