கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x

சங்கனாங்குளத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

இட்டமொழி அருகே உள்ள சங்கனாங்குளத்தில் தமிழக அரசின் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை சங்கனாங்குளம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.சின்னத்தம்பி தொடங்கி வைத்தார். கால்நடை டாக்டர் கணேசன், கால்நடை ஆய்வாளர் ராஜா, உதவியாளர் கிருஷ்ணபெருமாள் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். சிறந்த கால்நடைகள் வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் சமுதாய பணியாளர்கள் வனஜா, அனுசியா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story