கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x

திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்த மாதம் முதல் 280 இடங்களில் கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் 2023-ம் ஆண்டு ஜனவரி வரை கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதில் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 20 இடங்கள் வீதம் மொத்தம் 280 இடங்களில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம்களில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி செலுத்துதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை பரிசோதனை, சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்டவை இலவசமாக அளிக்கப்படுகிறது.

எனவே விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களுக்கு ஆடு, மாடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளை அழைத்து சிகிச்சை அளிக்கலாம் என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.



Next Story