கால்நடை மருத்துவ முகாம்
வாசுதேவநல்லூர் யூனியன் சங்கனாப்பேரியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் யூனியன் சங்கனாப்பேரியில் மாவட்ட கால்நடைத்துறை, வாசுதேவநல்லூர் இந்தியன் வங்கி கிளை சார்பில், சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஜெயபாண்டியன் தலைமை தாங்கினார். சங்கனாபேரி ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரவேல், வாசுதேவநல்லூர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்தியன் வங்கி உதவி மேலாளர் அனீஸ் பாத்திமா வரவேற்று பேசினார்.
சென்னை இந்தியன் வங்கி தலைமை அலுவலக பொது மேலாளர் (அனைவருக்கும் வங்கி சேவை திட்டம்) வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். தென்மலை கால்நடை மருத்துவர் ரவிச்சந்தின், நெற்கட்டும்செவல் கால்நடை உதவி மருத்துவர் அருண்குமார், கால்நடை ஆய்வாளர் களஞ்சியகுமாரி ஆகியோர் தலைமையிலான குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மருந்துகள், தீவனங்கள் வழங்கப்பட்டன. இந்தியன் வங்கி கிளை மேலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.