படைவீரர் கொடி நாள் வசூல் பணி தொடக்கம்


படைவீரர் கொடி நாள் வசூல் பணி தொடக்கம்
x

படைவீரர் கொடி நாள் வசூல் பணி தொடங்கியது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடி நாள் வசூல் பணி தொடங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி படைவீரர் கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து தொடங்கி வைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டிற்கான கொடி நாள் நிதி வசூல் நிர்ணயிக்கப்பட்ட ரூ.32 லட்சத்து 75 ஆயிரத்தை விட அனைத்து துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு ரூ.40 லட்சத்து 75 ஆயிரம் நிதி வசூலித்து சாதனை படைத்தது. நடப்பாண்டில் அரியலூர் மாவட்டத்திற்கு கொடி நாள் வசூல் இலக்கு ரூ.34 லட்சத்து 60 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரியலூரில் நடந்த தேநீர் விருந்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, திருமண நிதியுதவி உள்ளிட்ட திட்டத்தின் கீழ் 29 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரமணசரஸ்வதி வழங்கினார்.


Next Story