12-வது தவணைத்தொகை பெற விவசாயிகளின் நில ஆவணம் சரிபார்ப்பு


12-வது தவணைத்தொகை பெற விவசாயிகளின் நில ஆவணம் சரிபார்ப்பு
x

தேனி மாவட்டத்தில் பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் 12-வது தவணைத்தொகை பெற விவசாயிகளின் நில ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 11-வது தவணை தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது 12-வது தவணை தொகை பெறுவதற்கு விவசாயிகள் தங்களின் நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, பயனாளிகளின் நில ஆவணங்கள் தமிழ்நிலம் இணையதளத்துடன் இணைத்து சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகிறது. இத்திட்டத்தில் நிதிஉதவி பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய நில ஆவணங்களை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் காண்பித்து சரிபார்த்துக் கொண்டால் மட்டுமே அடுத்த தவணை தொகை கிடைக்கும். விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து நில ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இத்திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடப்பதால், தகுதியான விவசாயிகள் தங்களின் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story