பழிக்கு பழியாக நடந்த கொலை: 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை -சென்னை கோர்ட்டு தீர்ப்பு


பழிக்கு பழியாக நடந்த கொலை: 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை -சென்னை கோர்ட்டு தீர்ப்பு
x

பழிக்கு பழியாக நடந்த கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேடு மெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்ற அமலாபால் (வயது 20). இவரது சகோதரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (17) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் தனது சகோதரரை கொலை செய்த விக்னேசை பழிக்கு பழியாக தீர்த்துக்கட்ட பிரகாஷ் முடிவு செய்தார்.

அதன்படி, கடந்த 25.10.2018 அன்று வீட்டில் இருந்து கடைக்கு சென்ற விக்னேசை, பிரகாஷ் என்ற அமலாபால், அஜித் (23), மோகன் (25), சாரதி (23) ஆகியோர் சுற்றிவளைத்து கத்தியால் வெட்டினர்.

இதில் பலத்த காயம் அடைந்த விக்னேஷ் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, பிரகாஷ் உள்பட 4 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.11 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story