வேங்கைவயல் விவகாரம்: 10 பேரிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை


வேங்கைவயல் விவகாரம்: 10 பேரிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை
x

வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரிக்க வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்தவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொண்ட 5 சிறார்கள் உள்பட 31 பேரில், 10 பேரிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை செய்யப்படுகிறது. இதற்கான சம்மனை சிபிசிஐடி போலீசார் கடந்த 25-ம் தேதி அனுப்பினர்.

புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் 10 பேரும் ஆஜராகி சம்மன் குறித்த அவர்களின் கருத்துகளை தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story