வேம்பையனார் கோவில் குடமுழுக்கு


வேம்பையனார் கோவில் குடமுழுக்கு
x

குடவாசல் அருகே வேம்பனூரில் வேம்பையனார் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர்

குடவாசல்:

குடவாசல் அருகே வேம்பனூரில் வேம்பையனார் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குடமுழுக்கு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா வேம்பனூரில் பிரசித்தி பெற்ற வேம்பையனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்கு நடந்தது. விழாவை முன்னிட்டு பூர்வாங்கள் பூஜைகள் நடந்தது. மேலும் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் வாஸ்து சாந்தியுடன் 3 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று கங்கை, யமுனை, காவேரி, கோதாவரி, பிரம்மபுத்திரா, ஆகிய புண்ணிய நதிகளின் புனிதநீர் அடங்கிய கடம், மங்கள இசை முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காலை 9 மணியளவில் குடமுழுக்கு நடைபெற்றது.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எம்.எல்.ஏக்கள் பூண்டி.கலைவாணன், ஆர்.காமராஜ், த.மா.கா. மாநில நிர்வாகி சுரேஷ் மூப்பனார், த.மா.கா. மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், மஞ்சக்குடி ஊராட்சி தலைவர் வனிதாகண்ணதாசன், ஊராட்சி துணைத் தலைவர் முத்துலட்சுமி, சிட்டி யூனியன் வங்கி சேர்மன் பாலசுப்பிரமணியன், நாராயணி நிதி லிமிடெட் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை வேம்பனூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story