வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் பவனி
வால்பாறையில் வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் பவனி நடைபெற்றது.
வால்பாறை
வால்பாறையில் வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் பவனி நடைபெற்றது.
தேர் பவனி திருவிழா
வால்பாறையில் கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தேர் பவனி திருவிழா விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் மாலை 6 மணிக்கு ஆலய பங்கு குரு ஜெகன் ஆண்டனி தலைமையிலும், கோவை கார்மேல் பள்ளி குரு ஆரோக்கியதேயுஸ், ஊட்டி மறை மாவட்ட குரு லூயிஸ், முடீஸ் புனித அந்தோணியார் ஆலய பங்கு குரு மரிய அந்தோணிசாமி, அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலய பங்கு குரு ஜெரால்டின்ஸ்டீபன் ஆகியோர் முன்னிலையிலும் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது.
நவநாள் வழிபாடு
திருப்பலிக்குப்பிறகு சிறப்பு நவநாள் வழிபாடு, நற்கருணை ஆராதனை வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளமலை எஸ்டேட், கருமலை எஸ்டேட் பகுதியில் இருந்து வேளாங்கண்ணி மாதா சொரூபங்கள் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. மேலும் திருவிழாவையொட்டி ஆலயம் வண்ண மின்விளக்குகளால் ஜொலித்தது.
அன்பின் விருந்து
நேற்று தேர் பவனி திருவிழாவையொட்டி பங்கு குருக்கள் ஜெகன்ஆண்டனி, விசுவாசம் அலெக்சாண்டர் ஆகியோர் தலைமையில் ஊட்டி மறைமாவட்ட குரு லூயிஸ் சிறப்பு கூட்டு பாடல் திருப்பலியை நிறைவேற்றினார். திருப்பலிக்குப்பிறகு கருமலை வேளாங்கண்ணி மாதா நவநாள் வழிபாடும், நற்கருணை ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது. பின்னர் ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுத்து கிறிஸ்தவர்கள் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினார்கள். தொடர்ந்து அனைவருக்கும் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.