வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா - சிறப்பு ரெயில்கள் இயக்கம்


வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா - சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x

திருவனந்தபுரம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுமென ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சி,

தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து விழாக்கால சிறப்பு ரெயில் (வண்டி எண்.06115) நாளை (புதன்கிழமை), 28-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4-ந்தேதி ஆகிய நாட்களில் பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும்.

இதேபோல் மறு வழித்தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து விழாக்கால சிறப்பு ரெயில் (வண்டி எண்.06116) வரும் 22, 29 மற்றும் அடுத்த மாதம் 5-ந்தேதி ஆகிய நாட்களில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரலை மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு சென்றடையும்.

இந்த ரெயில்கள் நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story