ஈரோட்டில் தக்காளி விலை உயர்வு


ஈரோட்டில் தக்காளி விலை உயர்வு
x

ஈரோட்டில் தக்காளி விலை உயர்வு

ஈரோடு

ஈரோடு

தக்காளி விலை தினமும் ஏற்ற, தாழ்வாக காணப்படுகிறது. ஆங்காங்கே பெய்யும் பலத்த மழை காரணமாக விளைச்சல் குறைவாக இருப்பதால், விலை அதிகரித்து வருகிறது. ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.35-க்கு விற்பனையானது. இந்தநிலையில் நேற்று தக்காளியின் வரத்து குறைந்ததால், விலை மீண்டும் உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விலை போனது.


Next Story