2,400 பள்ளிகளில் காய்கறி தோட்டம்-கலெக்டர் பேச்சு


2,400 பள்ளிகளில் காய்கறி தோட்டம்-கலெக்டர் பேச்சு
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,400 பள்ளிகளிலும் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் முருகேஷ் பேசினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 2,400 பள்ளிகளிலும் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' திட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் முருகேஷ் பேசினார்.

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம்

திருவண்ணாமலை நகராட்சியில் சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியில் 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' என்ற திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' என்ற திட்டத்தின் நோக்கம் பள்ளிகள் தோறும் தூய்மை பணிகள் மேற்கொள்வதாகும். பள்ளியை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும், இதற்காக அந்தந்த பள்ளியில் தலைமையாசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய குழுக்கள் மற்றும் தேசிய பசுமை படை மாணவர்களை கொண்டு குழுக்கள் செயல்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 400 பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் காய்கறித் தோட்டம், படித்தோட்டம் அமைக்க வேண்டும்.

பள்ளியின் சுற்றுச்சுவரை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். பள்ளி வளாக சுற்றுச்சுவரில் சுதந்திர போராட்ட வீரர், தமிழறிஞர்கள் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை வரைதல் வேண்டும்.

மாணவர்களாகிய உங்களிடத்திலிருந்து தொடங்கினால் தான் தூய்மையான சமுதாயத்தை உருவக்க முடியும். எனவே ஒவ்வொரு மாணவரும் சுதாராத்திற்கு முக்கியத்தும் அளிக்க வேண்ம்.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும்

மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லுங்கள். அப்போது தான் தொலைநோக்கு பார்வை, சமூக சிந்தனைகள் உள்ளிட்ட அறிவுதிறனை வளர்த்து கொள்ள முடியும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வருகை தராத 2 ஆயிரத்து 555 மாணவர்களில் 1086 மாணவர்கள் திரும்ப பள்ளிக்கு வருவகை தருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாடபுத்தகம், மிதிவண்டி, காலை உணவு, மதிய உணவு, தங்கி பயில விடுதி வசதிகள் போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியர்கள் நல்ல முறையில் படித்து வாழ்கையில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி, சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசியர் மனோன்மணி, திருவண்ணாமலை தாசில்தார் சரளா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story