வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மாசி மகா சிவன் ராத்திரி தேர் திருவிழா


வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மாசி மகா சிவன் ராத்திரி தேர் திருவிழா
x

வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மாசி மகா சிவன் ராத்திரி தேர் திருவிழா

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் 140 ஆவது ஆண்டு மாசி மகா சிவன் ராத்திரி தேர் திருவிழா நிகழ்ச்சி.

வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும், இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு தேர்த்திருவிழா நடைபெறும், இந்த ஆண்டு 140 ஆவது மாசி மகா சிவன் ராத்திரி தேர் திருவிழாவை முன்னிட்டு இந்த மாதம் பிப்ரவரி 1ஆம் தேதி காலை முகூர்த்தம் நிகழ்ச்சியுடன் தொடங்கி நேற்று முன் தினம் 10ம் தேதி காலை தேரில் கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது, அதைத் தொடர்ந்து இந்த மாதம் பிப்ரவரி 18 ஆம் தேதி மாலை பள்ளய பூஜை, மறுநாள் 19ஆம் தேதி சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளச் செய்தல், அதைத்தொடர்ந்து திருத்தேர் நிலை பெயர்த்தல், 20ஆம் தேதி 2 ம் நாள் தேரோட்டம், 21 ஆம் தேதி மாலை திருத்தேர் நிலை சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய துறை அதிகாரிகள், கோவில் குலத்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தேர் திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் குலத்தவர்கள் செய்து வருகின்றனர்.

----------


Next Story