வீடூர் பாலமுருகன், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வீடூர் பாலமுருகன், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
மயிலம்:
வீடூர் கிராமத்தில் உள்ள பாலமுருகன், முத்துமாரியம்மன் ஆகிய கோவில்களில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில மாதங்களாக 2 கோவில்களிலும் திருப்பணிகள் நடந்து. தற்போது 2 கோவில்களும் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இந்த 2 கோவில்களிலும் கும்பாபிஷேகம் கடந்த 23-ந் தேதி காலை கணபதி பூஜை, மகாகணபதி, மகாலட்சுமி, நவகிரக ஹோமம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று காலை 3-ம் கால பூஜை முடிந்ததும் யாக சாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் எடுத்துச்செல்லப்பட்டது. விழாவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞரணி தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு பாலமுருகன் கோவில் விமான கலசத்தின் மீதும், முத்துமாரி அம்மன் கோவில் விமான கலசம் மீதும் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். பின்னர் மூலவர்களுக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் மாசிலாமணி, தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், வீடூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி பிரகாஷ், மணலிப்பட்டு சேகர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவி, நெடி சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் கங்காதுரை, கவுன்சிலர் சுந்தரி மற்றும் கிராம நாட்டாண்மைகள், கோவில் நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வீடூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.