வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனித் திருவிழா தேரோட்டம்


வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனித் திருவிழா தேரோட்டம்
x

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனித் திருவிழா தேரோட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

வாசுதேவநல்லூர் ,

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணி நாதர் கோவில் உள்ளது. சிவபெருமான் உமையொரு பாகனாக உருவம் தரித்து பக்தர்களுக்கு அருள் வழங்கும் ஸ்தலங்கள் தமிழகத்தில் இரண்டு மட்டுமே உள்ளது. அவ்விரண்டு திருத்தலங்களுள் வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஒன்றாகும்.

பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி அம்பாள் வீதி உலா, சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது.

இதில் திருத்தேர் உபயதாரரும் அலங்காரம் மற்றும் பராமரிப்பு மண்டபதடிதார்களான எஸ். தங்கப்பழம் குடும்பத்தினர், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருத்தேரோட்டம், சிவ சிவ அரோகரா, ஓம் சக்தி பராசக்தி என கோசங்கள் முழங்க தொடங்கியது.

நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மாலை 3.45 மணி அளவில் டேர் நிலையத்தை வந்தடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் ஏராளமான போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பத்தாம் திருநாள் நினைவு நாள் நிகழ்ச்சியாக இன்று மாலை 5 மணி அளவில் தீர்த்தவாரி சப்தா வர்ணம் நடைபெறுகிறது. இரவு 8 மணி அளவில் தெப்ப தேரோட்டம் நடைபெறுகிறது.


Next Story