முருகன் கோவிலில் வருண கலச பூஜை


முருகன் கோவிலில் வருண கலச பூஜை
x

தோரணமலை முருகன் கோவிலில் வருண கலச பூஜை நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி-கடையம் பிரதான சாலையில் தோரணமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமையன்றும் மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் வருண கலச பூஜை, வேல் பூஜை நடைபெறுவது வழக்கம். இம்மாத பூஜை நேற்று நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரகக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம், வருண கலச பூஜை, வேல் பூஜை நடைபெற்றது. முன்னதாக மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கலந்து கொண்டு, கும்மியடித்து வழிபட்டனர். காலை, மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.


Next Story