பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்


பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
x

பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

திருப்பூர்

பொங்கலூர்

திருப்பூர் அருகே கோவில் வழியில் பெரும்பண்ணை ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருக்கல்யாண மஹோத்ஸவ நிகழ்ச்சி அடுத்த மாதம் 5-ம் தேதி நடக்கிறதுமாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில்வரதராஜ பெருமாளுக்கும்-பெருந்தேவி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. முன்னதாக வருகிற 4-ந்தேதி காலை 8 மணிக்கு வாசுதேவ புண்யாகம், 108 ராமானுஜ ஸ்நபன கலசம், மகா சங்கல்பம், 108 கலச அபிஷேகம், தீபாராதனை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து 5-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.



Next Story