ரூ.50 கோடியில் வண்டியூர் கண்மாய் அழகுப்படுத்தும் பணி -அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்


ரூ.50 கோடியில் வண்டியூர் கண்மாய் அழகுப்படுத்தும் பணி -அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்
x

ரூ.50 கோடி செலவில், வண்டியூர் கண்மாய் அழகுப்படுத்தப்படுகிறது. அதற்கான பணியினை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மதுரை


ரூ.50 கோடி செலவில், வண்டியூர் கண்மாய் அழகுப்படுத்தப்படுகிறது. அதற்கான பணியினை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சைக்கிள்கள் பாதை

மதுரை வண்டியூர் கண்மாய், வண்டியூர், கோமதிபுரம், மேலமடை, மானகிரி, தாசில்தார் நகர், அண்ணா நகர் கே.கே.நகர் உள்ளிட்ட வைகை வடகரை பகுதி மக்களின் முக்கிய நிலத்தடி நீராதரமாக உள்ளது. சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்து இருந்த வண்டியூர் கண்மாய், ஆக்கிரமிப்புகளால் 550 ஏக்கர் பரப்பளவுக்கு குறைந்து போய் விட்டது. இந்த நிலையில் வண்டியூர் கண்மாயை தூர்வாரி அழகுப்படுத்த தமிழக அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

மேலும், கண்மாயில் படகுசவாரி, சைக்கிள்கள் பாதை அமைத்தல், நடைபயிற்சி பாதை, யோகா மையம், தியான மையம், சிற்றுண்டி, சிறிய நூலகம், குழந்தைகள் மற்றும் முதியோர் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், இறகு பந்து மைதானம், வாகன நிறுத்துமிடம், நவீன கழிப்பிடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.

அதற்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பள்ளி கட்டிடம்

அதன் தொடர்ச்சியாக அமைச்சர்கள், அனுப்பானடி பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தனர். அனுப்பானடியில் செயல்படும் மாநகராட்சி பள்ளி, கடந்த 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2007-ம் ஆண்டு இந்த பள்ளி உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அங்கு அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். அதன்படி 7 வகுப்பறைகள், 1 நவீன ஸ்மார்ட் வகுப்பறை, தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்கள் அறை கட்டப்பட்டு நேற்று திறக்கப்பட்டன. தொடர்ந்து அமைச்சர்கள் குப்பைகளை அகற்றுவதற்காக, 15-வது மத்திய நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 87 லட்சம் செலவில் வாங்கப்பட்டுள்ள 40 இலகுரக வாகனங்களை பயன்பாட்டிற்கு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

விழாக்களில் தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், மாநகர பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி கமிஷனர்கள் திருமலை, காளிமுத்தன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், மண்டல தலைவர்கள் முகேஷ்சர்மா, வாசுகி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கியசேவியர், உதவிப்பொறியாளர்கள் (வாகனம்) ரிச்சார்டு, அமர்தீப், கவுன்சிலர்கள் பிரேமா, கார்த்திகேயன், துரைப்பாண்டியன், கதிரவன், ராஜா உள்பட உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story