வண்டிமலைச்சி அம்மன் கோவில் கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி


வண்டிமலைச்சி அம்மன் கோவில் கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை வண்டிமலைச்சி அம்மன் கோவில் கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை வண்டிமலைச்சி அம்மன் கோவில் கொடை விழா நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னர் கோவில் வளாகத்தில் கால்நாட்டு வைபவம் நடந்தது. இதனை தொடர்ந்து வண்டிமலைச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

கால்நாட்டு நிகழ்ச்சியில் கடையநல்லூர் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவை முன்னிடு வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு குடி அழைப்பும், இரவு 10 மணிக்கு அம்பாள் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 16-ந் தேதி காலை பால்குடம் நிகழ்ச்சியும், இரவில் அம்பாள் சிங்க வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 17-ந் தேதி காலை பொங்கல் விழாவும், இரவில் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடக்கிறது.

முக்கிய நிகழ்ச்சியாக 18-ந் தேதி மாலை 3 மணிக்கு வண்டிமலைச்சி அம்பாள் சிங்க வாகனத்தில் கோவிலில் இருந்து மேளதாளங்களுடன் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று குண்டாற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


Next Story