ஆகஸ்ட் 15-ந்தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் - பூங்கா நிர்வாகம் அறிவிப்பு
வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகஸ்ட் 15-ந்தேதி செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை,
இந்தியாவில் மிகப்பெரிய பழமையான உயிரியல் பூங்கா வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த பூங்காவை சுற்றிப் பார்க்க மக்கள் வருகை தருகின்றனர். வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படுகிறது.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 15-ந்தேதி செயல்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
In the event of Independence Day, Arignar Anna Zoological Park will be open for visitors on 15.08.2023, a Tuesday.#ArignarAnnaZoologicalPark #AAZPChennai #VandalurZoo #Independenceday pic.twitter.com/4B38iviDtA
— Vandalur Zoo @Arignar Anna Zoological Park Chennai (@VandalurZoo) August 11, 2023 ">Also Read: