வேன் டிரைவர் தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே நாட்டார்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் பரமசிவன் (வயது 39). இவர் சொந்தமாக வேன் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். மேலும் ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பரமசிவன் சம்பவத்தன்று பக்கத்து ஊரான திரவியநகரில் விஷம் குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story