வாஜ்பாய் பிறந்தநாள் விழா
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
வாஜ்பாய் பிறந்தநாள் விழா
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பு அணிகள் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி நாமக்கல் மணிக்கூண்டு அருகே வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர்கள் முத்துகுமார், ரவிக்குமார் தலைமை தாங்கினர். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், மகளிர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயந்தி, வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் சிலம்பரசன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட துணை தலைவர் சுரேஷ் கண்ணன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
ராசிபுரம்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா ராசிபுரம் நகர பா.ஜ.க. சார்பில் ராசிபுரம் வனச்சரக அலுவலகம் அருகில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு பா.ஜ.க. கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். பிறகு அவர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் நகர பா.ஜ.க. தலைவர் வேலு, பொறுப்பாளர் முத்துசாமி, நகர பொது செயலாளர்கள் வெங்கடேசன், நாகராஜ், பொருளாளர் ராஜா, துணைத் தலைவர்கள் கார்த்திக், வினோத்குமார், தரவுத்தள மேலாண்மை பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் சதீஷ் சீனிவாசன், நகர சிறுபான்மை தலைவர் அலாவுதீன் நகர பட்டியல் அணி தலைவர் குமார், மகளிர் அணி தலைவி மகாலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன் உள்பட பல்வேறு அணித் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியில் சிலர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
மோகனூர்
இதேபோல் மோகனூர் ஒன்றியம் வளையபட்டி பஸ் நிறுத்தம் அருகே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி பா.ஜ.க. சார்பில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நிர்வாகி பிரபாகரன் தலைமையில் பா.ஜ.க. கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகி மகேஸ்வர், சவுந்தரராஜன், நல்ல கணேஷ் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் பெரிய தேர் நிலை அருகில் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சேந்தமங்கலம் ஒன்றிய பா.ஜ.க. தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தங்கராசு முன்னிலை வகித்தார். அப்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் கலை கலாசார பிரிவு ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் பழனிசாமி, முருகேசன், பாண்டு உள்பட பலர் கலந்து கொண்டனர்.