வைகோவின் கார் டிரைவர் மயங்கி விழுந்து சாவு


வைகோவின் கார் டிரைவர் மயங்கி விழுந்து சாவு
x

நெல்லை அருகே வைகோவின் கார் டிரைவர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை என்ற துரை (வயது 59). இவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று நெல்லை அருகே இட்டேரி பகுதியில் உள்ள தோட்டத்து பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது நீச்சல் குளத்தின் அருகில் சின்னத்துரை திடீரென்று தவறி விழுந்து மயங்கி கிடந்தார்.

உடனே அவரை நண்பர்கள் மீட்டு சிகிச்ைசக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சின்னத்துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வைகோவின் கார் டிரைவர் மறைவையொட்டி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் நிஜாம் உள்ளிட்ட நிர்வாகிகள் குவிந்தனர். பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் சின்னத்துரையின் உடல் அடக்கம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.



Next Story