டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை


டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பஸ்நிலையம் அருகே ம.தி.மு.க. சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி அங்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் கூறுகையில், "பத்திரிக்கை உலகில் புரட்சி செய்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் மகன் டாக்டர் பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனார் 'தினத்தந்தி' பத்திரிகையை பங்களாவாசி முதல் ஏழை- எளிய மக்கள் வரை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கியவர். அதில் தமிழக செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், பொருளாதார செய்திகள் உள்ளிட்டவைகளை உடனுக்குடன் கொடுத்தவர். தந்தி டி.வி.யை உருவாக்கிய சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளை சங்கரன்கோவிலில் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி தருகிறது" என்றார்.

நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார், ம.தி.மு.க. துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் ரத்னவேல்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story