அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா


அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா
x
தினத்தந்தி 30 May 2023 12:15 AM IST (Updated: 30 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தனி சன்னதி கொண்டு வள்ளி தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வைகாசி பெருவிழாவை முன்னிட்டு 3-ம் நாள் மண்டகபடியில் முருகனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு முருகப்பெருமான் ஆட்டுக்கடா வாகனத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந் தேதி நடக்கிறது.


Next Story