செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கொண்டாட்டம்


செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
x

செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடந்தது.

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றியல் மன்ற சிறப்புக் கூட்டம் மற்றும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சிறப்புக் கொண்டாட்டத்தையொட்டி வரலாற்றியல் துறையின் சார்பாக இருபெரும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ந.கலைவாணி தலைமை தாங்கினார். வேதியியல் துறைத்தலைவர் சித.ரவிச்சந்திரன் மற்றும் தமிழ்த்துறைத்தலைவர் கு.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவர் இ.ரஞ்சித் வரவேற்றார். விழாவில் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத்துறை துறை முன்னாள் தலைவரான ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆர்.வி.ரகுராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு "தந்தை பெரியாரும் வைக்கம் போராட்டமும்" என்ற தலைப்பில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது சமுதாயச் சிந்தனைகளையும் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

வைக்கம் போராட்ட நிகழ்வுகளையும் அதனால் சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் மாணவர்களுக்கு விளக்கினார். தொடர்ந்து வரலாற்று மன்ற விழாவினையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. முடிவில் கல்லூரி மாணவர் ஸ்ரீமுருகன் நன்றி கூறினார்.


Next Story