வடபாதிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தலைமையாசிரியரை நியமிக்க வேண்டும்
வடபாதிமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தலைமையாசிரியரை நியமிக்க வேண்டும்
திருவாரூர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக தலைமையாசிரியர் நியமிக்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் பள்ளியின் வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தலைமையாசிரியரை நியமிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தலைமையாசிரியர் நியமிக்கப்பட்டால் மட்டுமே முழுமையான செயல் திட்டங்கள் மற்றும் மாணவர்களின் முழுமையான கல்வித்திறன், பள்ளியின் வளர்ச்சி பணிகள் மேம்பாடு அடையும். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தலைமையாசிரியரை நியமிக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story