செம்பட்டிவிடுதியில் வடமாடு மஞ்சுவிரட்டு
செம்பட்டிவிடுதியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
செம்பட்டிவிடுதி அருகே வடவாளத்தில் கலியுக மெய்ய அய்யனார் கோவில் திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முதலில் மஞ்சுவிரட்டு உறுதி மொழியை புதுக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி வாசிக்க, வீரர்கள் அதனை எடுத்து கொண்டனர். மஞ்சுவிரட்டை முத்துராஜா எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை, மதுரை, திருவள்ளூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 13 காளைகள் கலந்து கொண்டன. இதில் 143 வீரர்கள் கலந்து கொண்டு குழுக்களாக காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் துள்ளிக்குதித்து சென்றது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், குக்கர், ரொக்கம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. சிறந்த முறையில் காளைகளை தழுவிய வீரர்களுக்கு டி.வி.யும், காளையர்களை திக்கு முக்காட செய்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பிரிட்ஜும் வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.