மொரப்பூரில்வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம்


மொரப்பூரில்வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

மொரப்பூர் அரசு கால்நடை மருந்தகத்தில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் ராமகிருஷ்ணன், கால்நடை உதவி டாக்டர்கள் காந்திராஜன், கனகசபை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி டாக்டர் வெற்றிவேல் வரவேற்று பேசினார்.

முகாமில் எம்.தொப்பம்பட்டி, மொரப்பூர், தாசரஅள்ளி, எலவடை ஆகிய ஊராட்சிகளை சுமார் 788 வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தும் பணியை மொரப்பூர் உதவி கால்நடை டாக்டர் வெற்றிவேல் தலைமையில் கால்நடை ஆய்வாளர் தனலட்சுமி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆண்ட்ரூ, முருகன், மஞ்சு ஆகிய கொண்ட குழுவினர் செய்தனர்.


Next Story