திருவாரூர் மாவட்டத்தில் 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


திருவாரூர் மாவட்டத்தில் 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x

திருவாரூர் மாவட்டத்தில் 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

கொரோனா தடுப்பூசி

கொரோனா வைரஸ் நோய் தொற்றினை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. அதன் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மேலும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு, 2-ம் தவணைக்கான தகுதியேற்பு நாள் கொண்டவர்கள் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை ஊக்குவிப்பு தவணை (பூஸ்டர்) தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.

400 இடங்களில்...

அந்தவகையில் இன்று திருவாரூர் மாவட்டத்தில ஊராட்சி பகுதிகளில் 242 இடங்களிலும், நகராட்சிகளில் 40 இடங்களிலும், பேரூராட்சிகளில் 18 இடங்களிலும், 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 8 அரசு ஆஸ்பத்திரிகளிலும், அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம், நடமாடும் கொரோனா தடுப்பூசிகுழு 40 என மொத்தம் 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

திருவாரூர் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அடியக்கமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் குருதேவ் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் திருமக்கோட்டை, மகாராஜபுரம், தோப்பு, பெருமாள் கோவில் நத்தம், மேலநத்தம், வல்லூர், ராதா நரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், தென்பரை, பாளையகோட்டை, கோவிந்தநத்தம், பரசபுரம், நத்தம், பாலையூர் ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதற்கான பணிகளை டாக்டர் தளபதி மற்றும் செவிலியர்கள் மேற்கொண்டனர்.


Next Story