வருகிற 14-ந் தேதி வரைகோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்


வருகிற 14-ந் தேதி வரைகோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:30 AM IST (Updated: 7 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 14-ந் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோழிக்கழிச்சல் நோய்

தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களின் வாழ்வாதாரமாக நாட்டுக்கோழி வளர்ப்பு இருந்து வருகிறது. கோழி வளர்ப்பு மூலம் தங்களது குடும்பத்திற்கான முட்டை மற்றும் இறைச்சி தேவைகளை அடைவதோடு, விற்பனை மூலம் பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றனர்.

கோழி வளர்ப்பு ஊரக பகுதிகளில் உபயோகமற்ற தானிய மிகுதிகளிலும், நிலத்தில் கிடைக்கக்கூடிய அதன் உணவு வகைகள் மூலமாகவும் நடைபெற்று வருகிறது. கோழிகளை எளிதாக பாதிக்கக்கூடிய நோயாக கோழிக்கழிச்சல் நோய் உள்ளது. அதனை கட்டுப்படுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி முகாம்

கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற 14-ந் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாம் தங்களது பகுதியில் நடைபெறும் தேதியை தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் அறிந்து கொண்டு, மேற்கண்ட முகாமில் கலந்து கொண்டு தங்களது கோழிகளுக்கு இலவசமாக கோழிக்கழிச்சல் தடுப்பூசி மருந்தை செலுத்தி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story