குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்


குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்
x

அம்பலூர், ஆலங்காயம் பகுதியில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

கிராமங்களில் உள்ள துணை சுகாதார மையம் மூலம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வாணியம்பாடி அடுத்த அம்பலூர் துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். வட்டார மருத்துவ அலுவலர் செல்லமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதே போல் ஆலங்காயம் துணை சுகாதார நிலையத்தின் மூலம் நிம்மியம்பட்டு வெள்ளைகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இப்பணிகளை வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி பார்வையிட்டார்.


Next Story