காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்


காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
x

சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர்கள் பேரவை மாநில தலைவர் எஸ்.ஆறுமுகம் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

வருகிற 15-ந் தேதி முதல் அரசுதொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் தமிழக முதல்-அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். மேலும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஒய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் என்பதை தற்போதைய பொருளாதார, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் காய், மளிகை பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story