நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி


நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி
x

நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.

ஈரோடு

நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணியை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.

நாடாளுமன்ற தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

மேலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து 1,400 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,000 கட்டுப்பாட்டு கருவிகளும், திருச்சியில் இருந்து 700 வி.வி.பேட் கருவிகளும் வரவழைக்கப்பட்டன.

சரிபார்க்கும் பணி

இந்தநிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணியை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா அரசியல் கட்சியினர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், "நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதில் 4 ஆயிரத்து 275 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 3 ஆயிரத்து 184 கட்டுப்பாட்டு கருவிகள், 3 ஆயிரத்து 424 வி.வி.பேட் கருவிகள் ஆகியன சரிபார்க்கப்படுகின்றன" என்றார்.

பெல் நிறுவனத்தை சேர்ந்த 8 பொறியாளர்கள் மூலமாக வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிகுமார், தாசில்தார்கள் சிவசங்கர் (தேர்தல்), சிவகாமி (சமூக பாதுகாப்பு திட்டம்), ஜெயகுமார் (ஈரோடு) உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story