'நீட்' தேர்வு மையம் அமைக்க வலியுறுத்தல்


நீட் தேர்வு மையம் அமைக்க வலியுறுத்தல்
x

‘நீட்’ தேர்வு மையம் அமைக்க வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, மாநில துணைத் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சித்தா டாக்டர் கோசிபா, மாவட்ட செயலாளர் சிவகுமார், மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மாவட்டத் தலைநகரான பெரம்பலூரில் நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட தேர்வுகளுக்கான தேர்வு மையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்குத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும். சனமங்கலத்தில் உள்ள வனவியல் பூங்காவை உயிரியல் பூங்காவாக மேம்படுத்தி, சுற்றுலாத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய வகையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூரில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் வணிகவரி அலுவலகத்துக்கு சொந்தக் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் வைரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆரோக்கியம், ஆனந்த பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட இணைச் செயலாளர் ரமேஷ் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவி நன்றி கூறினார்.


Next Story